இடுகைகள்

எதிர்பார்த்தது நில்..

      அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.இப்போது நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம்.... இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தடுமாறுகிறோம்... நானும் அந்த சூழ்நிலையில்தான் வாழ்ந்து வருகிறேன்... குடும்பத்தில் முதல் மகனாக பிறந்தவர் நான்... diploma படிப்பை முடித்து விட்டு ஒரு கூலி தொழிலாளராக வாழ்ந்து வருகிறேன்.. எப்போதும் நிலைத்து நிற்கும் மனநிலையில் இருந்த நான் ‌இப்போது தடுமாறி நிற்கிறேன்... அம்மாவுக்கு கண் பிரச்சினை.. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.30,000-ம் செலவாகும்.. இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லை.. சகோதரர் சென்னையில் வேலை செய்து வருகிறார்... அவர் செலவை ஏற்றுக் கொள்ள முடியும்.என் சூழ்நிலையில் என்னால் செலவை ஏற்றுக்கொள்ள முடியாது...கலங்கி நிற்கிறேன்... ஆகையால் நண்பர்களே இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லாமல் இருந்த நான் இப்போது அடுத்தவர் கைகளை எதிர்பார்த்தது நிற்கிறேன்...நம் வாழ்க்கையில் எப்போது பிரச்சினை வரும் என்பது தெரியாது.. அது வரும்போது பதட்டம் அடைவதை விட முன் எச்சரிக்கையுடன் வாழ பழகி கொள்ளுங்கள்... எதிர்ப...

தேனீர் எனும் தேவதை

  தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் கூலி தொழிலாளர்களாக வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒருவேலை உணவுக்காக ஒருநாள் முழுவதும் வேலை செய்யும் நிலை உள்ளார்கள். இவர்கள் பெரும்பாலும் நேரங்களில் தேனீறையே உணவாக உட்கொள்கின்றனர். நானும் சில நேரங்களில் உணவுக்கு பதிலாக தேனீறையே பருகி உள்ளேன்...என்னை பொறுத்தவரையில் தேனீர் என்பது தேவதையே... ஆம் நண்பர்களே என் வாழ்க்கையில் பல நேரங்களில் தேனீர் உற்ற நண்பனாக உள்ளது..ஆம், என் தனிமை நேரங்களில் தேனீர் எப்போதும் என்னுடனே பயணித்து உள்ளது...என் கண்ணீரில்,என் மகிழ்ச்சியில்,என் சிரிப்பில்,என் துன்பத்தில் எப்போதும் என்னுடன் என் தேனீர் தேவதை...என் மனம் உடையும் போது பல தூரங்கள் பயணித்து தேனீர் அருந்தியுள்ளேன்.நண்பர்களே வாழ்க்கையில் பல்வேறு நேரங்களில் நாம் அழும் போது ஏதாவது ஒன்றை தேடி போவோம்.. நான் தேனீரை தேடி.... நண்பர்களே!! ஒரு தேனீர் பல்வேறு நண்பர்களுக்கு பல முறையில் பல விதமாக உதவி செய்கிறது...ஒரு தேனீருக்கு  இவ்வளவு திறன் உள்ளது என்றால் நீங்கள் எவ்வளவு திறன் உள்ளவர்கள் என்று எண்ணி பாருங்கள்..உங்கள் தேடலை விரிவுபடுத்தி கொள்ளுங்கள்.வானம் வசப்படும்........நன்றி...