தேனீர் எனும் தேவதை

  தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் கூலி தொழிலாளர்களாக வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒருவேலை உணவுக்காக ஒருநாள் முழுவதும் வேலை செய்யும் நிலை உள்ளார்கள். இவர்கள் பெரும்பாலும் நேரங்களில் தேனீறையே உணவாக உட்கொள்கின்றனர். நானும் சில நேரங்களில் உணவுக்கு பதிலாக தேனீறையே பருகி உள்ளேன்...என்னை பொறுத்தவரையில் தேனீர் என்பது தேவதையே... ஆம் நண்பர்களே என் வாழ்க்கையில் பல நேரங்களில் தேனீர் உற்ற நண்பனாக உள்ளது..ஆம், என் தனிமை நேரங்களில் தேனீர் எப்போதும் என்னுடனே பயணித்து உள்ளது...என் கண்ணீரில்,என் மகிழ்ச்சியில்,என் சிரிப்பில்,என் துன்பத்தில் எப்போதும் என்னுடன் என் தேனீர் தேவதை...என் மனம் உடையும் போது பல தூரங்கள் பயணித்து தேனீர் அருந்தியுள்ளேன்.நண்பர்களே வாழ்க்கையில் பல்வேறு நேரங்களில் நாம் அழும் போது ஏதாவது ஒன்றை தேடி போவோம்.. நான் தேனீரை தேடி.... நண்பர்களே!! ஒரு தேனீர் பல்வேறு நண்பர்களுக்கு பல முறையில் பல விதமாக உதவி செய்கிறது...ஒரு தேனீருக்கு  இவ்வளவு திறன் உள்ளது என்றால் நீங்கள் எவ்வளவு திறன் உள்ளவர்கள் என்று எண்ணி பாருங்கள்..உங்கள் தேடலை விரிவுபடுத்தி கொள்ளுங்கள்.வானம் வசப்படும்........நன்றி.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்