தும்பை பற்றி தெரியுமா???

  


             பொதுவா தும்பை உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளி அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம் நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தும்பை நல்ல தீர்வா இருக்கு.

கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும் நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“தும்பை செடியில பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித்தும்பை என பல வகைகள் இருக்கு. தும்பைச் செடியில இலையும் பூவும் இரண்டுமே மருத்துவ குணம் கொண்டிருக்கு"

                               குறிப்பா தும்பை இலையோட மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லணும்ன்னா ஐயம்(சளி), முப்பிணி (வாதம்-பித்தம்-கபம்), தலைவலி, மூக்கில் உண்டாகும் நோய்கள், நீர்வேட்கை, இருமல் ஆகிய நீர் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வா இருக்கு. இந்த பசுமையான இலைகளை புளி சேர்த்து கடைஞ்சு உணவுல சேர்த்து சாப்பிட்டா கண் புகைச்சல், கை-கால் அசதி, அதிக தாகம், சோம்பல் இவையெல்லாம் குணமாகும்.

தும்பை இலைகளை அவ்வப்போது உணவுல சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் மாதிரி தொந்தரவுகள் அடிக்கடி வராது. இதன் இலைகளையும் பூக்களையும் உலர வச்சு, தேன்ல குழைத்து அப்பப்போ சாப்பிட்டு வர நாட்பட்ட இரைப்பு நோய் தீவிரம் குறையும்.

தும்பைப்பூவின் பயன்கள்;

            தும்பைப்பூ நீர்வேட்கை, முப்பிணி ஜுரம் மற்றும் கண் நோய்களை குணப்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்குக்கு தும்பைப்பூ சாறின் ஆறு துளிகளை கர்ச்சூரக்காய் பொடியோடு சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை கொடுத்து வந்தா வயிற்றுப்போக்கு குணமாகும்.

தீராத தலைவலிக்கு, இரண்டு துளிகள் தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டா தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவை எண்ணெயில போட்டு காய்ச்சி, தலையில தேய்ச்சு தலை முழுகி வந்தா தலைபாரம், ஒற்றைத் தலைவலி, நீரேற்றம், மூக்கு அடைப்பு நீங்கும்.

நாவறட்சி ஏற்பட்டு அதிக தாகம் இருக்கும்போது, தும்பைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வச்சு, கொஞ்சம் தேன் கலந்து பானமாக பருகி வந்தா, நாவறட்சி சரியாகும்.

பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம்பழத்துடன் கலந்து சுவைச்சு சாப்பிட்டா, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், நுரையீரல் பாதையில அடைச்சிட்டு இருக்குற கோழையும் வெளியேறும்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்