செம்பருத்தி பயன்கள்
செ ம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன. செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. ஒற்றைத் தலைவலி,முகப்பருக்கள்,அசிடிட்டி,அல்சர், இரத்தக் கசிவு பி...