இடுகைகள்

படம்
  மஞ்சள் ! "வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பேசப்போகும் விஷயம் நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த, ஆனால் அதன் உண்மையான அற்புதங்களைப் பற்றி சிலருக்கு மட்டும் தெரிந்த ஒன்று – அது தான் மஞ்சள் ! மஞ்சளின் பயன்கள் , அதில் உள்ள சத்துகள் , மற்றும் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்!" மஞ்சளின் பயன்கள்; "மஞ்சள் என்பது சவுன்றா மற்றும் சித்த மருத்துவத்தில் சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை. அதில் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்து 'கர்குமின்' (Curcumin) என்பது பல மருத்துவ குணங்கள் கொண்டது. மஞ்சளின் முக்கியமான பயன்கள்: ✅ செரிமானத்தை மேம்படுத்தும் ✅ தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ✅ தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து ✅ அர்த்தரைட்டிஸ், வீக்கம், வலி ஆகியவற்றை குறைக்கும் ✅ புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கக்கூடிய தன்மை ✅ மன அழுத்தம் மற்றும் துக்கத்தை குறைக்கும் தன்மை கூட உள்ளது." மஞ்சளில் உள்ள சத்துகள்; "மஞ்சளில் உள்ள முக்கிய சத்துக்களைக் பார்ப்போம்: 🔸 Curcumin – உயிரணுக்களில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் 🔸 மாங்கனீஸ் – எலும்புகள், செரிமா...

செம்பருத்தி பயன்கள்

படம்
                                                                              செ ம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.   இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன. செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.   ஒற்றைத் தலைவலி,முகப்பருக்கள்,அசிடிட்டி,அல்சர், இரத்தக் கசிவு பி...

அரப்பின் மருத்துவ குணம்

படம்
               அ ரப்பு தலையானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.அரப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும் கோடை காலங்களில் அரப்பு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.  பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும்.  இது சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. நாம் தினசரி குளிக்கும் பொழுது சிறிதளவு அரப்பினை மை போன்று அரைத்து முகத்திற்கு தேய்த்து குளித்து வருவதன் மூலம் முகம் பளபளப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும். இயற்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு பொருள் தான் அரப்பு. இந்த அரப்புத்தூள் தான் பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வருது அரப்பு தூள் ஒரு மரத்தினுடைய இல்லை. இந்த அரப்பு மரம் அதிகப்படியா கிராமங்களில் காணப்படும் பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்கள் காலத்தில் இருந்தே பயன்...

மஞ்சளின் அற்புதமான மருத்துவக்குணம்

படம்
மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.  மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த  ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின்  தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.   மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது. மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் விளியாகும். மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும்.  மஞ்சளை விழுதாக் அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும். மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்து களியாகக் கிண்டியோ, சதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மீது போடுவதால் அது பழுத்து  உடையும். மஞ்சள், வேப்பில...

தும்பை பற்றி தெரியுமா???

படம்
                பொ துவா தும்பை உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளி அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம் நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தும்பை நல்ல தீர்வா இருக்கு. கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும்  நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. “தும்பை செடியில பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித்தும்பை என பல வகைகள் இருக்கு. தும்பைச் செடியில இலையும் பூவும் இரண்டுமே மருத்துவ குணம் கொண்டிருக்கு"                                குறிப்பா தும்பை இலையோட மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லணும்ன்னா ஐயம்(சளி), முப்பிணி (வாதம்-பித்தம்-கபம்), தலைவலி, மூக்கில் உண்டாகும் நோய்கள், நீர்வேட்கை, இருமல் ஆகிய நீர் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வா இருக்கு. இந்த பசுமையான இலைகளை புள...

ஆண் உயிர்

படம்
  ஓரிதழ் தாமரை👶 பெயரைக்கேட்டதும் இது தாமரையில் ஒரு வகையா? அப்படியானால் ஏன் தாமரையைப்போல தண்ணீரில் வளரவில்லை என்பார்கள். இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு 'ரத்தின புருஷ்' என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது. இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும், சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் கட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலன் தரும். # ஓரிதழ்தாமரையின் இலையை அதிகா...

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்

படம்
தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த நூற்றாண்டில் வாழும் நாம்,என்ன செய்கின்றோம் என்று புரியவில்லை....ஒரு சக்கரம் போல் வாழ்கிறோம்..24 நேரம் உழைத்தாலும் தகுந்த ஊதியம் கிடைப்பது இல்லை....நம்மில் பலரும் படித்தவர்களாகவே இருக்கிறோம்‌.ஆனால்‌ ஏன் வாழ்வில் முன்னேறவில்லை தெரியுமா..? இதோ காரணம் என்வென்று தெரிந்து கொள்ளுங்கள்... நம்மில் பலரும் தன்னில் உள்ள திறமைகளை அறிந்து கொள்வதில்லை...ஆம் நீங்கள் பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை செய்தாலும் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் உங்களை தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.உங்கள் முதலாளிகளை கவனித்து பாருங்கள்.. அவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவார்கள்... காரணம் உங்களை போன்ற திறமையானவர்கள் அவர்களுடன் இருப்பார்கள்.மேலும் அவர்கள் பணம் எனும் சங்கிலிகளால் உங்களை கட்டி வைப்பார்கள்.சிந்தீத்து பாருங்கள் உங்கள் உழைப்புதான் உங்கள் முதலாளிகளுக்கும் உணவு கொடுக்கிறது.. ஆனால் உங்களின் ஊதியமோ மிக குறைவாக இருக்கும்.பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை பார்க்கும் உங்களுக்கு அந்த துறையில் அனைத்து நுனுக்கங்களும் உங்களுக்கு தெரியும்...அவற்றை பயன்படுத்தி வாழ்வில் கவனமாக ம...